News February 26, 2025
மகா சிவராத்திரி.. கோயிலில் காணாமல் போன சிவலிங்கம்!

சிவராத்திரிக்கு தயாரான பக்தர்களுக்கு கோயிலை திறந்து பார்த்ததுமே அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர். ஆனால், அவர்கள் வேறு எந்த பொருளையும் சீண்டவில்லை. அரபிக்கடல் கடற்கரையில் குஜராத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. லிங்கத்தை கடலில் போட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால், தற்போது Deep Sea Diversஐ வைத்து தேடும் பணி தொடர்கிறது. இன்னைக்குள் கிடைச்சிருமா?
Similar News
News March 7, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 7, மாசி 23 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News March 7, 2026
கமேனியை கொன்ற BLUE SPARROW

கமேனியை கொல்வதற்கு இஸ்ரேல் ராணுவம் BLUE SPARROW என்ற அதி நவீன ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் எடை 1,900 கிலோ ஆகும். இதை எதிர்நாட்டு வான்பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிவது சிரமம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், இந்த ஏவுகணை நேரடியாக இலக்கை தாக்காமல் வானுக்கு செல்லும். அதன்பிறகு தாக்கவேண்டிய இலக்கை லாக் செய்துவிட்டு ஒலியின் வேகத்தை விட பலமடங்கு வேகத்தில் கீழே வந்து தாக்குமாம்.
News March 7, 2026
முசுமுசுக்கை கீரையின் நன்மைகள்

முசுமுசுக்கை கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களுக்கும், மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுகளுக்கும் முசுமுசுக்கை சூப் சிறந்த மருந்தாகும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் வாய் கசப்பை போக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதன் இலையை அரைத்து சாறு எடுத்து தோசை மாவில் கலந்து ஊற்றிச் சாப்பிடலாம்.


