News February 26, 2025
மின்தடையால் சிலியில் அவசரநிலை

சிலி நாட்டில் ஏற்பட்ட மின் தடை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி, போக்குவரத்து, இன்டர்நெட் என அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. காப்பர் ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நிலைமையை சமாளிக்க சிலி அரசு அவசர நிலை அமல்படுத்தியுள்ளது. இரவு முதல் காலை வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் தடைக்கு சைபர் தாக்குதல் காரணமல்ல என சிலி அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
Similar News
News February 26, 2025
கூகுளில் விரைவில் QR CODE முறை

கூகுள் மெயில் உள்ளிட்டவற்றை புதிய டிவைசில் பயன்படுத்த SMS மூலம் உறுதிப்படுத்தும் முறை தற்போது உள்ளது. இதை ஹேக்கர்கள் ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை தடுக்க QR CODE மூலம் உறுதி செய்யும் முறையை கூகுள் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த முறை வந்தால், செல்போன் கேமரா ஸ்கேனர் மூலம் ஸ்கேனிங் செய்தால் போதும். SMS தேவையில்லை.
News February 26, 2025
விஜய் ரசிகரை கலாய்த்த ஜோதிகா

பொதுவாக திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு ரிப்ளை செய்வதில்லை. அப்படி, என்றாவது ஒருநாள் செய்யும் ரிப்ளை ‘நச்’சென தலையில் அடித்தது போல இருக்கும். அப்படி ஒரு ரிப்ளையைதான் நடிகை ஜோதிகா செய்துள்ளார். “உங்கள் கணவரை விட தளபதி சூப்பர்” என்று விஜய் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ய, சிரிப்பு ஸ்மைலியை போட்டு சத்தமில்லாமல் கலாய்த்துவிட்டார் ஜோதிகா.
News February 26, 2025
ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தோனி

ஒவ்வொரு ஆண்டும் தோனிக்கு அதுதான் கடைசி ஐபிஎல் என்று ஒரு கும்பல் சொல்ல, அதனை பொய்யாக்கி மீண்டும் மீண்டும் அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் அணிந்திருக்கும் டி-சர்ட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், <<15589856>>மோர்ஸ் codeஇல் ‘One Last Time’ என எழுதப்பட்டுள்ளது<<>>. இதனால், தோனிக்கு இதுதான் கடைசி IPLஆக இருக்குமோ என்று அவரது ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.