News February 26, 2025
முன்னாள் ராணுவ வீரர் கொலை: மனைவி உள்பட 8 பேர் கைது

திருவாலங்காடு அடுத்த முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது கார் மோதி உயிரிழந்தார். விசாரணையில், வெங்கடேசனை அவரது மனைவி சந்தியா, சகோதரர் சண்முகம் மற்றும் கள்ளக்காதலன் லோகேஷ் உள்ளிட்ட 8 பேர் உடன் இணைந்து கார் ஏற்றி ராடால் அடித்து கொலை செய்தனர். 8 பேரும் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News August 29, 2025
BREAKING: திருவள்ளூர் எம்.பி உண்ணாவிரதம்

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வழங்காததை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் தனது ஆதரவாளர்களுடன் இன்று தனது அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். இந்த விவகாரம் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது எம்.பியின் உண்ணாவிரத போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 29, 2025
திருவள்ளூர்: B.Sc,B.E.,B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு

திருவள்ளுர் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <
News August 29, 2025
திருவள்ளூர்: சென்ட்ரல் மின்சார ரயில்கள் ரத்து

பொன்னேரி கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி (இரவு 11:20 ரயில்) மற்றும் கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் (இரவு 9:25 மணி ரயில்) இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.