News February 26, 2025
இறக்கும் வரையில் தமிழ் உணர்வு அழியாது: CM ஸ்டாலின்

‘இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு எனவும், அதனைச் சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தி மீது பாஜகவினருக்கு உள்ள உணர்வு, உண்மையில் தமிழ் மீது இருந்திருக்க வேண்டும் என்றும் சாடியுள்ளார்.
Similar News
News February 26, 2025
ENGக்கு 326 ரன்கள் இலக்கு

ICC சாம்பியன்ஸ் டிராபியில் இன்று ENG-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த AFG 50 ஓவரில் 325 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் 177 (6 SIX, 12 FOUR) ரன்கள் விளாசினார். ENG அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆர்ச்சர் 3 விக்கெட்டை கைப்பற்றினார். இப்போட்டியில் யார் தோல்வி அடைந்தாலும் வெளியேற வேண்டும் என்பதால், இங்கி., அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 26, 2025
கூகுளில் விரைவில் QR CODE முறை

கூகுள் மெயில் உள்ளிட்டவற்றை புதிய டிவைசில் பயன்படுத்த SMS மூலம் உறுதிப்படுத்தும் முறை தற்போது உள்ளது. இதை ஹேக்கர்கள் ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை தடுக்க QR CODE மூலம் உறுதி செய்யும் முறையை கூகுள் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த முறை வந்தால், செல்போன் கேமரா ஸ்கேனர் மூலம் ஸ்கேனிங் செய்தால் போதும். SMS தேவையில்லை.
News February 26, 2025
விஜய் ரசிகரை கலாய்த்த ஜோதிகா

பொதுவாக திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு ரிப்ளை செய்வதில்லை. அப்படி, என்றாவது ஒருநாள் செய்யும் ரிப்ளை ‘நச்’சென தலையில் அடித்தது போல இருக்கும். அப்படி ஒரு ரிப்ளையைதான் நடிகை ஜோதிகா செய்துள்ளார். “உங்கள் கணவரை விட தளபதி சூப்பர்” என்று விஜய் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ய, சிரிப்பு ஸ்மைலியை போட்டு சத்தமில்லாமல் கலாய்த்துவிட்டார் ஜோதிகா.