News February 26, 2025
துணை சுகாதார நிலையத்தில் ஜன்னல் கண்ணாடி உடைப்பு

தகரக் குப்பத்தில் புதிதாக துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. இந்த சுகாதார நிலையத்தில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் நேற்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தார். இதுகுறித்து செவிலியர் ஒருவர் வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து, ஜன்னல் கண்ணாடியை உடைத்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
Similar News
News March 8, 2026
ராணிப்பேட்டை: கட்சித் தாவிய 100 பேர்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் ஓச்சேரி தனியார் மண்டபத்தில் நேற்று மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ம.க. மாநில மாணவரணி துணை செயலாளர் ஒச்சேரி பழனி, அதிமுகவைச் சேர்ந்த அருண், திபன், குப்பன் உள்ளிட்ட பலர் அமைச்சர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
News March 8, 2026
ராணிப்பேட்டையில் அதிரடி கைது

அரக்கோணம் டவுன் போலீசார் அம்மனூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் இருவர் தப்பியோட முயன்றனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த திவாகர், லோகநாதன் என்பதும், 4 கிலோ குட்காவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.
News March 8, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


