News March 30, 2024
‘தி கோட்’ சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டி.வி

நடிகர் விஜய்யின், ‘The G.O.A.T’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்துக்குக் கொடுத்த விலையையே இந்தப் படத்திற்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் எதிர்பார்த்ததாம். ஆனால், சன் டி.வி தரப்பில் ₹50 கோடி மட்டுமே தர முடியுமென உறுதியாக வியாபாரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல், சன் டி.வி சொன்ன விலைக்கே ஏ.ஜி.எஸ் படத்தைக் கொடுத்திருக்கிறது.
Similar News
News April 7, 2026
செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தம்

கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனையை அதிமுக வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் மற்றும் வழக்கு விவரங்கள் புதிதாக கட்டப்படும் வீடு ரோட்டரி லைசன்ஸ் காலாவதியானது போன்ற காரணங்களால் 5 மணி வரை வேட்பு மனு பரிசீலனை நிறுத்தப்பட்டுள்ளது.
News April 7, 2026
திமுகவிலிருந்து விலகினார் PT செல்வகுமார்

விஜய்யின் Ex மேனேஜரும், திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளருமான <<19108223>>PT செல்வகுமார்<<>> அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காலம் தனக்கு அதிகாரம் அளிப்பதை தள்ளிப் போடுவதாக கூறியுள்ள அவர், கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக சமூக பணியை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திமுகவில் இணைந்த இவர், விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பி வந்தார்.
News April 7, 2026
சிக்கனில் இந்த பாகங்களை சாப்பிடாதீங்க!

கோழி ஒரு நல்ல புரதச்சத்து நிறைந்த உணவு. இருப்பினும், அதில் சில பாகங்களை உண்பதை தவிர்ப்பது சில நோய்கள் வருவதை தடுக்க உதவும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். ➤கொழுப்பு மட்டுமே உள்ள தோல், மற்றும் பாக்டீரியாக்கள் வாழும் இடங்களான கழுத்து, தலை, நுரையீரல், இரைப்பை, கால்கள், வால் பாகங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ➤இவை செரிமான பிரச்னை ➤நோய் தொற்றுகளையும் ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர். SHARE.


