News February 26, 2025
மேலாளர் கொலை வழக்கில் ஆயுள் சிறை

மதுரை தனியார் தங்கும் விடுதி மேலாளரான தர்மராஜன் என்பவர் 7.7.2022 அன்று விடுதியில் தூங்கி கொண்டிருந்த போது கைப்பேசி சாா்ஜரால் கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த சங்கிலி மோதிரத்தை திருடிய வழக்கில் ராஜஸ்தானைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்தாகாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணன்தாகாவுக்கு ஆயுள் சிறை, ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி கே. ஜேசப் ஜாய் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
மதுரை: தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒரு தமிழ் ஆர்வலருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், www.tamilvalarchithurai.tn.gov.in ஆகியவற்றில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
News August 13, 2025
மதுரை: 96 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News August 13, 2025
மதுரை: இது முக்கியம்.. உடனே பண்ணுங்க.!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <