News February 26, 2025
ரஞ்சி இறுதிப் போட்டியில் விதர்பா – கேரளா மோதல்

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் இன்று விதர்பா – கேரளா அணிகள் மோதுகின்றன. 90வது ரஞ்சி கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. விதர்பா அணி 3வது முறையாகவும், கேரளா முதல் முறையாகவும் கோப்பையை கையில் ஏந்த போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
Similar News
News February 26, 2025
திகார் சிறைக்குள் சுப்ரதா ராய் உல்லாசம்: முன்னாள் எஸ்.பி.

திகார் சிறை முன்னாள் எஸ்.பி. சுனில் குப்தா அண்மையில் அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜெயிலில் இருந்த சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், மது, பெண் செயலாளர் என உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும், அவருடன் பல மாதங்கள் விமானப் பணிப்பெண்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார். கெஜ்ரிவாலிடம் இதை தாம் கூறியதாகவும், இதற்காக பின்னாளில் தன்மீது பொய் வழக்கு பாய்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News February 26, 2025
அவங்கள கேளுங்க: செல்வப்பெருந்தகை

தவெக தலைவர் விஜய் மத்திய அரசைப் பார்த்து தான் கேள்வி கேட்க வேண்டும், மாநில அரசை அல்ல என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். TN மக்கள் மீது அக்கறை இருந்தால் மும்மொழிக் கொள்கையை ஏன் எங்கள் மீது திணிக்கிறீர்கள் என பாஜக அரசை பார்த்து தான் விஜய் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். LKG, UKG குழந்தைகள் போல மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஆளுங்கட்சிகள் விளையாடுவதாக விஜய் விமர்சித்திருந்தார்.
News February 26, 2025
PF வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்

EPFO வட்டியை 8.35% ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை வட்டி விகிதத்தை உயர்த்தினால் ஊழியர்கள் நிம்மதி அடைவர். மோடி ஆட்சியில் EPFO தொடர்ந்து 2 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 2023-24ஆம் ஆண்டில் PF வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தியது கவனிக்கத்தக்கது.