News February 26, 2025
இறந்தவர்களின் நினைவுகளை மீட்க முடியுமா?

நாம் இறந்தபின், நம்முடைய மூளையில் இருக்கும் நினைவுகள் என்ன ஆகும்? நம்முடைய குழந்தைப்பருவம், காதல், குரோதம், வன்மம், பரிவு, பாசம் அனைத்தும் அழிந்து போகும்தானே? அதனை மீட்க வழியிருப்பதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். மூளையில் சேகரிக்கப்பட்டிருக்கும் நினைவுகள் இறந்த பின்னும் அழியாது என்றும் அதனை மீட்கலாம் என்றும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுக்கு நீங்க ரெடியா மக்களே?
Similar News
News February 26, 2025
சிவராத்திரியில் சிவலிங்கத்தை வழிபட்ட Ban. கிரிக்கெட் வீரர்

மகா சிவராத்திரியில் வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. வங்கதேசத்தில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்திருக்கிறார். அப்போது எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்த அவர், ‘ஹரா ஹரா மகாதேவ்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவை, நெட்டிசன்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
News February 26, 2025
அரசுப் பள்ளியிலேயே மாணவன் மரணம்

நாமக்கலில் அரசுப் பள்ளிக் கழிவறையில் 9ஆம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் இறப்புக்கு முறையான காரணம் கேட்டு, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில், தேனியில் கல்லூரி மாணவர் மரணத்திற்கு எறும்பு கடித்தது தான் காரணம் என கூறிய போலீஸ், இந்த மாணவன் இறப்பிற்கு என்ன சொல்லப் போகிறது என்று உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News February 26, 2025
2026இல் 10,000 பிளாக் ஸ்பாட்டுகளை நீக்க முடிவு

NH-ல் 10,000 பிளாக் ஸ்பாட்டுகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்க பிளாக் ஸ்பாட் வைக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில், விபத்துக்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கவனத்தில் காெண்டு, 2026ல் 10,000 பிளாக் ஸ்பாட்டுகளை நீக்க மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.