News February 26, 2025
புரோ ஹாக்கி தொடர்: இந்தியா அபார வெற்றி

பெண்கள் புரோ ஹாக்கி தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஷூட்-அவுட் விதி கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்தியா அபாரமாக செயல்பட்டு 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தது. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்திய அணிக்கு இது 3வது வெற்றியாகும்.
Similar News
News February 26, 2025
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு: ஒருமுறை மட்டும் எழுதலாம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வை 2 முறை எழுதும் வரைவு திட்டத்துக்கு சிபிஎஸ்இ நேற்று ஒப்புதல் அளித்தது. அதில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் மாணவர்கள் 2 முறையும் கட்டாயம் தேர்வு எழுத வேண்டியதில்லை, முதல் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதினால், 2ஆவது முறை எழுதுவது அவர்களது விருப்பம், 2ஆவது தேர்வில் குறிப்பிட்ட பாடங்களை மட்டும் தேர்வு செய்தும் எழுதலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
News February 26, 2025
அறியாமையில் பேசும் விஜய்: திமுக பதிலடி

இந்தி மொழித் திணிப்பில் திமுகவும், பாஜகவும் ஒன்று சேர்ந்து நாடகமாடுவதாக விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில், திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். மொழி பற்றி திமுக நாடகமாடுவதாக அறியாமையில் விஜய் பேசுகிறார் என விமர்சித்த அவர், இந்தி மொழிக்கு எதிராக 1938 முதல் போராட்டம் நடந்து வருகிறது. மொழிக்காக பலர் தீக்குளித்து உயிரைக் கொடுத்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
News February 26, 2025
சிவராத்திரியில் சிவலிங்கத்தை வழிபட்ட Ban. கிரிக்கெட் வீரர்

மகா சிவராத்திரியில் வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. வங்கதேசத்தில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்திருக்கிறார். அப்போது எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்த அவர், ‘ஹரா ஹரா மகாதேவ்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவை, நெட்டிசன்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.