News February 26, 2025
அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட மோகன் ஜி

இயக்குநர் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்திற்கான அப்டேட்டை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளார். தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மதியம் 11.59 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஒரு ரத்தம் படிந்த வாள் இடம்பெற்றுள்ளது. இப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 26, 2025
பாசிசமும், பாயாசமும்… கலாய்த்த விஜய்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் வேறொரு மொழியை திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என விஜய் தெரிவித்துள்ளார். கல்விக்கான நிதியை தரமுடியாது என கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. பாசிசமும், பாயாசமும், பேசி வைத்துக் கொண்டு மாறி, மாறி, சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுகின்றனர் என்றவர், what bro, it is very wrong bro…என கலாய்க்க அரங்கமே அதிர்ந்தது.
News February 26, 2025
திருமணம் செஞ்சிக்க ஆசை.. பிரபல நடிகை ஓப்பன் டாக்

திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ள முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் (49), அதற்கு சரியான பாட்னரைக் கண்டுபிடிப்பது முக்கியமானது என தெரிவித்தார். ஆனால் அது எளிதான விஷயமாக இருக்காது எனக் கூறி, தனது திருமணம் 2 இதயங்களின் சங்கமமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். நடிகர் ரோமான் ஷாவ்லை 3 ஆண்டுகளாக டேட்டிங் செய்த சுஷ்மிதா, அதன் பிறகு, லலித் மோடியையும் காதலித்து வந்தார்.
News February 26, 2025
ஒரு எம்பி தொகுதி கூட குறையாது: அமித் ஷா

தமிழ்நாட்டில் ஒரு எம்பி தொகுதி கூட குறையாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த பாஜக விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமிழக முதல்வரும், அவரது மகனும் தேடித் தேடி இல்லாத பிரச்னையை உருவாக்குகின்றனர் என சாடினார். தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகள் குறையும் என்பது கற்பனை என்றும் எந்த மாநிலத்திற்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது என்றும் கூறினார்.