News February 26, 2025
KKR அணியை வழிநடத்த தயார்: வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் அணியை வழிநடத்த தயாராக அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். தனக்கு தலைமை பண்பில் நம்பிக்கை இருப்பதாகவும், கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் தனக்கு வராது எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை 50 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 1,326 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 26, 2025
AI வீடியோவால் அமெரிக்க அதிபர் ‘அப்செட்’

அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்கின் கால்களை முத்தமிடுவது போன்ற AI வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு விவகாரங்களில் எலான் மஸ்குக்கு அதிக அதிகாரங்களை டிரம்ப் வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க அரசு அலுவலகத்தில் இந்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் அதிருப்தியில் உள்ள டிரம்ப் நிர்வாகம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது.
News February 26, 2025
வேகமாக பரவும் மர்ம நோய்க்கு 53 பேர் உயிரிழப்பு

ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோய்க்கு இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். 431 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் அறிகுறி தென்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 48 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால், காங்கோவில் அச்சம் நிலவி வருகிறது. வெளவால் கறி சாப்பிட்ட 3 சிறுவர்களிடம் இருந்து இந்நோய் மற்றவர்களுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.
News February 26, 2025
அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் கோல்டு கார்டு: டிரம்ப்

அமெரிக்காவில் தங்க அட்டை (Gold Card) திட்டம் ஒன்றை டிரம்ப் அறிமுகம் செய்துள்ளார். USAவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் டிரம்பின் இந்த அறிவிப்பு பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தங்க அட்டையில் குடியேறுபவர்கள் 5 மில்லியன் டாலர்(₹43 கோடி) செலுத்த வேண்டும் எனவும் இது கிரீன் கார்டை விட அதிக சலுகைகளைக் கொண்டது என்றும் டிரம்ப் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.