News February 26, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News February 26, 2025

45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு

image

மார்ச் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில், திமுக, அதிமுக, காங்., விசிக, சிபிஐ, சிபிஎம், பாஜக, பாமக, நாதக, தவெக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசு மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளும் விவகாரம் தொடர்பாக இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

News February 26, 2025

இறக்கும் வரையில் தமிழ் உணர்வு அழியாது: CM ஸ்டாலின்

image

‘இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு எனவும், அதனைச் சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தி மீது பாஜகவினருக்கு உள்ள உணர்வு, உண்மையில் தமிழ் மீது இருந்திருக்க வேண்டும் என்றும் சாடியுள்ளார்.

News February 26, 2025

TVK தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சால் பரபரப்பு

image

சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்குள் காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தவெகவின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க தனது வீட்டில் இருந்து விஜய் புறப்படவிருந்தார். அப்போது வெளியே நின்றிருந்த நபர் ஒருவர் திடீரென காலணியை எடுத்து விஜயின் வீட்டிற்குள் வீசினார். பதறிப் போன காவலாளிகள் உடனடியாக அவரை அப்புறப்படுத்தினர். காலணி வீசியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

error: Content is protected !!