News February 26, 2025
கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி போலீசார்

கோவை மாவட்டத்தில் இன்று (25.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசார் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மாநகரில் டி.எஸ்.பி. ஶ்ரீநிதி, மற்றும் பி.என்.பாளையம், கிணத்துக்கடவு, காருண்யா, சூலூர், செட்டிபாளையம், பொள்ளாச்சி தாலுகா, நெகமம், கோட்டூர், மேட்டுப்பாளையம் போலீசாரின் பெயரும் தொலைபேசி எண்ணும் பகிரப்பட்டுள்ளது. மேலும் அவசர எண் 100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 6, 2026
கோவை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

கோவை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 6, 2026
கோவை நாம் தமிழர் கட்சியினர் கைது! பரபரப்பு

கோவையில் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி, திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறித் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தநிலையில் தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
News March 6, 2026
50,000 ஊதியம்: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வேலை!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலகு, மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியுள்ளவர்கள் வரும் மார்ச் 10-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை “திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், 2-வது மாடி, ஆட்சியர் அலுவலகம், கோவை – 18” என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பலாம். இப்பணிக்கு மாத ஊதியமாக ₹50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


