News February 26, 2025
ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைத்துவிட்டீர்களா?

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால், ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாததுடன், பெயர் நீக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளது. குறிப்பாக, ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட வேண்டும். அரசு தரப்பில் வழங்கப்படும் மானியம் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Similar News
News February 26, 2025
தவெக 2ஆம் ஆண்டு விழாவில் #GETOUT பதாகை

தவெகவின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது. அதே நேரம் விமர்சனங்களுக்கு அஞ்சி கொடூங்கோலுடன் மக்களின் குரல்வளையை நெரிக்கும் அரசியல் கோழைத்தனம் என்பது உள்ளிட்ட 6 விமர்சனங்களை உள்ளடக்கிய பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக #GETOUT என்ற ஹேஷ்டேக் அதில் இடம் பெற்றுள்ளது.
News February 26, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.26) சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,050க்கும், சவரன் ₹64,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹2 குறைந்து ₹106க்கும், கிலோ வெள்ளி ₹1,06,00க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை சரிவால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை திடீர் சரிவு குறித்து உங்கள் கருத்து என்ன?
News February 26, 2025
தவெக விழாவில் 20 வகையான கமகமக்கும் விருந்து!

த.வெ.க.வின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கமகம விருந்து தயாராகி வருகிறது. அதில், கேரட் அல்வா, வடை, காலிப்பிளவர் 65, பூரி, பட்டானி குருமா, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், கதம்ப சாம்பார், ரசம், வெண்ணிலா ஐஸ்கிரீம், தயிர், பீன்ஸ் பருப்பு உசிலி, மோர், அப்பளம், வாழைப்பழம், ஊறுகாய், தண்ணிர் பாட்டில், அடைப் பிரதமம் ஆகியவை மொத்த மாமல்லபுரத்தையே மணமணக்க செய்துள்ளது.