News February 26, 2025
சிவராத்திரி: பஞ்ச பூத ஸ்தலங்கள்

மகா சிவராத்திரியையொட்டி பஞ்ச பூத சிவ ஸ்தலங்களை சிலர் வழிபடுவதுண்டு. அவை [1] காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் (நிலம்) [2] திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் (நெருப்பு) [3] திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் (நீர்) [4] தில்லை நடராஜர் கோயில் (ஆகாயம்) [5] காளஹஸ்தி திருக்காளத்தி கோயில் (காற்று). இந்த கோயில்களில் தரிசனம் செய்தால், சிவன் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
Similar News
News February 26, 2025
பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோரை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பி.கேவிடம் எதிர்கால அரசியல், 2026 தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்திலும் பி.கே உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
News February 26, 2025
ரெய்டு அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம்: அம்மன் அர்ஜூனன்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றதாக அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் கூறியுள்ளார். 13 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த பிறகு பேசிய அவர், எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார். கோவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த திமுக, வரும் தேர்தலிலும் தோல்வி அடையும் என்றார்.
News February 26, 2025
ஞானசேகரனின் தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல்

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.