News February 26, 2025
டெல்லி அணி அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவில் முதலில் விளையாடிய குஜராத் அணி, 127/9 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய DCW அணி, 15.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோனாசன் 61, ஷஃபாலி வர்மா 44 ரன்கள் எடுத்தனர். நாளை இரவு 7.30க்கு நடைபெறவுள்ள போட்டியில் உ.பி., வாரியர்ஸை, மும்பை அணி எதிர்கொள்கிறது.
Similar News
News February 26, 2025
டிஜிட்டல் கைது: துணை வேந்தரிடம் ரூ.14 லட்சம் மோசடி

ஒடிஷாவில் டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.14 லட்சத்தை பெர்காம்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாஞ்சலி இழந்துள்ளார். தன்னை அமலாக்கத்துறை அதிகாரி என்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் கைது மோசடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
News February 26, 2025
பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோரை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பி.கேவிடம் எதிர்கால அரசியல், 2026 தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்திலும் பி.கே உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
News February 26, 2025
ரெய்டு அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம்: அம்மன் அர்ஜூனன்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றதாக அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் கூறியுள்ளார். 13 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த பிறகு பேசிய அவர், எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார். கோவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த திமுக, வரும் தேர்தலிலும் தோல்வி அடையும் என்றார்.