News February 26, 2025
வேலை செய்ய மாட்டோம்.. பாகிஸ்தான் போலீஸ்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரை நடப்பாண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதற்கான பாதுகாப்புப் பணிகளில் பஞ்சாப் மாகாண போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களில் பலர் சரியாக வேலை செய்யவில்லை என்றும், சிலர் வேலைக்கே வருவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதனால், அந்த மாகாணத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 26, 2025
வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ள மார்ச் மாதத்தில், வங்கிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த மாதத்தில் வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகள், 2வது (மார்ச் 15) & 4-வது (மார்ச் 29) சனிக்கிழமைகளுடன், குட் பிரைடே (மார்ச் 29), தெலுங்கு வருடப்பிறப்பு (மார்ச் 30) சேர்த்தால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வருகிறது. இதற்கேற்ப உங்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். SHARE IT
News February 26, 2025
டிஜிட்டல் கைது: துணை வேந்தரிடம் ரூ.14 லட்சம் மோசடி

ஒடிஷாவில் டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.14 லட்சத்தை பெர்காம்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாஞ்சலி இழந்துள்ளார். தன்னை அமலாக்கத்துறை அதிகாரி என்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் கைது மோசடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
News February 26, 2025
பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோரை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பி.கேவிடம் எதிர்கால அரசியல், 2026 தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்திலும் பி.கே உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.