News February 25, 2025
30 நிமிடத்தில் சென்னை டூ திருச்சி போகலாம்

இந்தியாவின் முதல் ஹைப்பர்-லூப் மாடலை சென்னை ஐஐடியினர் உருவாக்கியுள்ளனர். சோதனை முயற்சியாக 420 மீட்டர் தூரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த ப்ராஜெக்ட்டிற்கு இந்திய ரயில்வே நிதியளிக்கிறது. அதிகபட்சம், மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் செல்லும் இந்த ஹைப்பர்-லூப் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு 30 நிமிடங்களில் செல்ல முடியும். சென்னையில் இருந்து குமரிக்கு 1 மணி நேரத்தில் செல்லலாம். ரெடியா மக்களே?
Similar News
News February 26, 2025
TVK 2ஆம் ஆண்டு தொடக்க விழா கோலாகலம்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று காலை நடைபெறவுள்ளது. 2026 சட்டசபை தேர்தல், கூட்டணி, கட்சியை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாகவும் தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்.
News February 26, 2025
இந்தியன் சூப்பர் லீக்: பெங்களூரு அணி வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு எப்.சி அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி முதல் பாதியில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
News February 26, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி. ▶பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். ▶நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களை கொன்றுள்ளது. ▶மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல. மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது.