News February 25, 2025
காலில் குத்தும் முள்ளைத்தான் பிடுங்குவோம்: சு.வெங்கடேசன்

₹500 நோட்டில் உள்ள இந்தியை முடிந்தால் அழியுங்கள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சவால் விடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் எம்.பி, ரூபாய் நோட்டில் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சமத்துவம் இருக்கும் இடத்தைக் குலைப்பது தங்கள் வேலையல்ல என்று கூறிய அவர், காலில் குத்தும் முள்ளைத்தான் பிடுங்குவோம், அதுவே அறிவுடைமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 26, 2025
இறந்தவர்களின் நினைவுகளை மீட்க முடியுமா?

நாம் இறந்தபின், நம்முடைய மூளையில் இருக்கும் நினைவுகள் என்ன ஆகும்? நம்முடைய குழந்தைப்பருவம், காதல், குரோதம், வன்மம், பரிவு, பாசம் அனைத்தும் அழிந்து போகும்தானே? அதனை மீட்க வழியிருப்பதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். மூளையில் சேகரிக்கப்பட்டிருக்கும் நினைவுகள் இறந்த பின்னும் அழியாது என்றும் அதனை மீட்கலாம் என்றும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுக்கு நீங்க ரெடியா மக்களே?
News February 26, 2025
உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இருவரும் அவரை வரவேற்றனர். பாஜக மாவட்ட அலுவலகம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்துகொள்கிறார். அவரின் வருகையையொட்டி கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News February 26, 2025
புரோ ஹாக்கி தொடர்: இந்தியா அபார வெற்றி

பெண்கள் புரோ ஹாக்கி தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஷூட்-அவுட் விதி கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்தியா அபாரமாக செயல்பட்டு 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தது. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்திய அணிக்கு இது 3வது வெற்றியாகும்.