News February 25, 2025
விஜய் கட்சியில் இணையும் நடிகை மற்றும் பிரபலங்கள்

மாமல்லபுரத்தில் நாளை தவெக 2ஆம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் மூன்று முக்கிய பிரபலங்கள் இணையவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. நாதகவில் இருந்து நேற்று விலகிய காளியம்மாள், பாஜகவில் இருந்து இன்று விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த மருது அழகுராஜ் ஆகியோர் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 26, 2025
அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட மோகன் ஜி

இயக்குநர் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்திற்கான அப்டேட்டை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளார். தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மதியம் 11.59 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஒரு ரத்தம் படிந்த வாள் இடம்பெற்றுள்ளது. இப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
News February 26, 2025
பாகிஸ்தானை திட்டமிட்டு வீழ்த்தியுள்ளனர்: ரமீஸ் ராஜா

CT தொடரில் இருந்து PAK அணி திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதாக பாக்., முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பலம் குன்றிய வங்கதேசத்தை தான் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்க வேண்டும் எனவும், நியூசிலாந்துடன் மோதும் வகையில் ஐசிசி அட்டவணை தயாரித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நியூசி மற்றும் இந்தியாவிடம் தோல்வி அடைந்த PAK அணி CT தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
News February 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 190
▶குறள்:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
▶பொருள்: அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?.