News February 25, 2025
டெல்லி அணிக்கு 128 ரன்கள் இலக்கு

மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது குஜராத் அணி. பெங்களூருவில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற DCW அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய GGW அணி, 20 ஓவர்களில் 127/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஃபுல்மாலி 40 ரன்கள் எடுத்தார். DCW தரப்பில் ஷிகா பாண்டே, மரிஜன், அனபெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Similar News
News February 26, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி. ▶பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். ▶நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களை கொன்றுள்ளது. ▶மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல. மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது.
News February 26, 2025
அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட மோகன் ஜி

இயக்குநர் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்திற்கான அப்டேட்டை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளார். தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மதியம் 11.59 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஒரு ரத்தம் படிந்த வாள் இடம்பெற்றுள்ளது. இப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
News February 26, 2025
பாகிஸ்தானை திட்டமிட்டு வீழ்த்தியுள்ளனர்: ரமீஸ் ராஜா

CT தொடரில் இருந்து PAK அணி திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதாக பாக்., முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பலம் குன்றிய வங்கதேசத்தை தான் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்க வேண்டும் எனவும், நியூசிலாந்துடன் மோதும் வகையில் ஐசிசி அட்டவணை தயாரித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நியூசி மற்றும் இந்தியாவிடம் தோல்வி அடைந்த PAK அணி CT தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.