News February 25, 2025
காவல் நிலையத்திலேயே கொடூரம்: கோர்ட் அதிரடி தீர்ப்பு

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல்லில் 2001ம் ஆண்டு நடந்த நகை திருட்டு தொடர்பான வழக்கு விசாரணையை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்றார். இவ்வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
Similar News
News February 26, 2025
இந்தியன் சூப்பர் லீக்: பெங்களூரு அணி வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு எப்.சி அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி முதல் பாதியில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
News February 26, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி. ▶பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். ▶நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களை கொன்றுள்ளது. ▶மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல. மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது.
News February 26, 2025
அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட மோகன் ஜி

இயக்குநர் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்திற்கான அப்டேட்டை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளார். தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மதியம் 11.59 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஒரு ரத்தம் படிந்த வாள் இடம்பெற்றுள்ளது. இப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.