News February 25, 2025
வெளியானது திடீர் வழுக்கை ரகசியம்

மஹாராஷ்டிராவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 300க்கும் மேற்பட்டோருக்கு, திடீரென அதீத முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணத்தை பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஹிம்மத்ராவ் கண்டறிந்துள்ளார். பொது விநியோக திட்டத்தில் வழங்கப்பட்ட கோதுமையில், 600 மடங்கு அதிகளவிலான செலினியம் இருந்ததே 4 நாள்களுக்குள் வழுக்கை ஏற்பட காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 26, 2025
KKR அணியை வழிநடத்த தயார்: வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் அணியை வழிநடத்த தயாராக அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். தனக்கு தலைமை பண்பில் நம்பிக்கை இருப்பதாகவும், கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் தனக்கு வராது எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை 50 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 1,326 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News February 26, 2025
இன்றைய (பிப். 26) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 26 ▶மாசி – 14 ▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM- 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:30 AM
▶குளிகை: 10:30 AM- 12:00 PM
▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்
▶நட்சத்திரம் : திருவோணம் மா 4.51
News February 26, 2025
பிட்காயின் ஊழல்: 60 இடங்களில் சி.பி.ஐ. விசாரணை

பிட்காயின் ஊழல் தொடர்பாக நாடு முழுவதும் 60 இடங்களில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, பலரும் இந்த டிஜிட்டல் வடிவிலான திட்டத்தில் இணைந்து பணம் முதலீடு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் ரூ.350 கோடி அளவுக்கு இத்திட்டத்தில் மோசடி நடந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி நடத்தப்படும் இதில், பலரும் ஏமாற்றப்பட்ட நிலையில், சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.