News March 30, 2024
20 ஆண்டுக்குப் பின்… இருவர்

20 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றுள்ளது. உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 16 இடங்களில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் தான் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியும். இதில் பிரனாய் (9), லக்சயா (16) ஆகிய இரு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அபின் ஷ்யாம், நிகில் கனேட்கர் என இரு வீரர்கள் பங்கேற்றனர்.
Similar News
News August 13, 2025
TVK என்றால் என்ன? வேல்முருகன் விளக்கம்

TVK-வின் விரிவாக்கம் ‘தமிழக வாழ்வுரிமை கட்சி’ தான் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதைவிடுத்து புதிதாக கட்சி ஆரம்பித்த ஒரு நடிகரின் கட்சியை TVK என பொதுமக்கள் அழைப்பது வேடிக்கையாக இருப்பதாக கூறினார். அரசுப்பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென கூறிய அவர், தமிழகத்தில் அதிகளவில் வடமாநிலத்தவர்கள் குடியேறுவதை ஒழுங்கப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
News August 13, 2025
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்று மாலை 1:54 மணிக்கு, நிலத்தின் அடியில் 39 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தோனேசியாவில் 4.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
News August 13, 2025
ஆகஸ்ட் 13: வரலாற்றில் இன்று

*1926 – புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினம்.
*1952 – நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் பிறந்த தினம்.
*1963 – நடிகை ஸ்ரீதேவி பிறந்த தினம்.
*1969 – நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தனர்.
*2004 – 28-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.