News March 30, 2024

நடிகர் டேனியல் பாலாஜிக்கு மரணத்திற்கு காரணம் இதுதான்

image

திருவான்மியூரில் தனது குடும்பத்தினருடன் வசித்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு இரவு 1 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை குடும்பத்தினர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சற்றுநேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ஓட்டேரி அரசு மின் மயானத்தில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

Similar News

News March 21, 2026

₹21,000 சம்பளம்.. 827 பணியிடங்கள்

image

மத்திய காவல்படையில் காலியாக உள்ள 827 பணியிடங்களுக்கான அறிவிப்பை SSB வெளியிட்டுள்ளது. கான்ஸ்டபிள் நிலை பணிகளுக்கு (டிரைவர், வெயிட்டர் உள்பட 11 பிரிவுகளுக்கு) 10-ம் வகுப்பு தகுதியும், 1 ஆண்டு துறைசார்ந்த அனுபவமும் தேவை. சம்பளம் : ₹21,700-₹69,100. உடற்தகுதி, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு இந்த <>லிங்க்கில்<<>> ஏப்.20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News March 21, 2026

BREAKING: விலகுவதாக அறிவித்தார் டிடிவி தினகரன்

image

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின் பேட்டியளித்த TTV தினகரன், வரும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷாவை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்த அவர், பிஹாரில் NDA ஒற்றுமையாக செயல்பட்டு வென்றதை போல தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவது பற்றி ஆலோசித்ததாக குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு செல்வது தவறில்லை எனவும் TTV தினகரன் தெரிவித்தார்.

News March 21, 2026

எல்லாவற்றிலும் முந்தும் சீமான்

image

மார்ச் 23 முதல் முதற்கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை சீமான் மேற்கொள்ளவுள்ளார். திருத்தணி முருகனை தரிசித்துவிட்டு பரப்புரையை தொடங்கும் அவர், மார்ச் 28-ல் ஆவடியில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே 234 தொகுதிகளுக்கும் சீமான் வேட்பாளர்களை அறிவித்தார். சமீபத்தில் நாதக தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.

error: Content is protected !!