News February 25, 2025
மேலே பாருங்க. எல்லாமே தெரியும்

வரும் 28ஆம் தேதி நைட் வானத்தை நோக்கி பார்த்தீங்கன்னா, 7 கோள்களையும் (பூமி தவிர) ஒரே நேரத்துல பார்க்கலாம். எப்பவோ ஒருமுறை நடக்குற இந்த அதிசயத்தை மிஸ் பண்ணிடாதீங்க. சூரியன் அஸ்தமிச்ச உடனே மேற்கு வானத்துல சனி, புதன், வெள்ளி கிரகங்களை வெறும் கண்கள்லயே பார்க்கலாம். அதுக்கு மேல நடு வானத்துல செவ்வாயையும், கிழக்குல செவ்வாயையும் பார்க்கலாம். யுரேனஸ் & நெப்டியூன் கிரகங்களைப் பார்க்க டெலெஸ்கோப் வேணும்.
Similar News
News February 26, 2025
ராசி பலன்கள் (26.02.2025)

மேஷம் – பக்தி, ரிஷபம் – நன்மை, மிதுனம் – சிந்தனை, கடகம் – பரிசு, சிம்மம் – உற்சாகம், கன்னி – அனுகூலம், துலாம் – வெற்றி, விருச்சிகம் – உயர்வு, தனுசு – குழப்பம், மகரம் – நற்செய்தி, கும்பம் – உதவி, மீனம் – புகழ்.
News February 26, 2025
இந்த பள்ளிகளில் தெலுங்கு மொழிப்பாடம் கட்டாயம்

தெலங்கானாவில் CBSE, ICSE உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 9, 10ம் வகுப்புகளுக்கு தெலுங்கு மொழிப்பாடத்தைக் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, 1 – 8ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டது. பிற தாய்மொழி மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் பாடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசு தெலுங்கை முழுமையாக அமல்படுத்தவில்லை என்று ஆளும் குற்றஞ்சாட்டியுள்ளது.
News February 26, 2025
வேலை செய்ய மாட்டோம்.. பாகிஸ்தான் போலீஸ்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரை நடப்பாண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதற்கான பாதுகாப்புப் பணிகளில் பஞ்சாப் மாகாண போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களில் பலர் சரியாக வேலை செய்யவில்லை என்றும், சிலர் வேலைக்கே வருவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதனால், அந்த மாகாணத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.