News February 25, 2025
ஈரோடு: பவளமலை முருகன் கோயில்!

கோபியில் உள்ள பவளமலை என்ற சிறிய குன்றில், புகழ்பெற்ற முத்துகுமாரசாமி கோயில் உள்ளது. பச்சமலை முருகனை பிரதிஷ்டை செய்த, துர்வாச முனிவர் தான், பவளமலை முருகனையும் பிரதிஷ்டை செய்தாராம். பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர், பவளமலையில் தரிசனம் செய்வதன் மூலம், செவ்வாய் தோஷம் நீங்குகிறதாம். செவ்வாய் கிழமையில் பவளமலை ஆண்டவனை வழிபட்டால், நினைத்தது நடக்குமாம்.
Similar News
News March 4, 2026
கோபி: கட்சி மாறிய காங்கிரஸ் நிர்வாகி!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் 4-வது வார்டு காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். கோபி நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவருக்குக் கட்சித் துண்டு அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர். இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளானது.
News March 4, 2026
ஈரோட்டில் அதிரடி மாற்றம்!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் 28 காவல் சார்பு ஆய்வாளர்களை (SI) இடமாற்றம் செய்து எஸ்.பி. சுஜாதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி பவானிசாகர், கொடுமுடி, சூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் பணியாற்றிய அதிகாரிகள் நிர்வாக நலன் கருதி மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணிகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
News March 4, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச்.03) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


