News February 25, 2025
மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக மார்ச் 15ஆம் தேதி வேலை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
விழுப்புரம்: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 24, 2025
முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு விழா

2025-26 முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழா நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் விழுப்புரம் அடுத்த காக்குப்பம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் முதல் பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீரர், வீராங்கனைகள் விழாவில் கலந்து பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், செப்டம்பர் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செப். 26 காலை 11 மணியளவில் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு மனுக்களை பெறுகிறார். இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுத்து பயன் பெறலாம்.