News March 30, 2024
சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் முதல்வரை சந்தித்தார்.

பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற உள்ள பிரச்சாரத்திற்காக சேலத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதி முதல்வருக்கு பொன்னாடை வழங்கி வரவேற்றார். மேலும் திமுக நிர்வாகிகள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 15, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம்: ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News October 14, 2025
சேலம்: தொடர் வழிப்பறி குற்றவாளி மீது குண்டாஸ்

சேலம்: கிச்சிப்பாளையத்தில் கடந்த செப்.15ஆம் தேதி அருண்குமார் என்பவரிடம் கத்தியை காட்டி வழிபறி செய்த வழக்கில் கிச்சிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இதுபோன்று பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாலும் பல காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.
News October 14, 2025
சேலத்தில் 5 பேர் மீது குண்டாஸ்!

சேலம்: வேடுகாத்தான் பட்டியில் கடந்த அக்.16ஆம் தேதி நடந்த கோயில் திருவிழா தகராறில் மோகன்ராஜ் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தங்கராஜ், இளங்கோ, சூர்யா, பிரகாஷ், கவின் ஆகிய ஐந்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.