News February 25, 2025
மகா சிவராத்திரியில் இங்கு வழிபட்டால் தொழில் தடை நீங்கும்

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமைந்துள்ளது பூலாநந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவில். 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த சிவாலயம் பற்றி கந்தபுராணத்தில் குறிப்பு உள்ளது. மகா சிவராத்திரி தினத்தன்று அதாவது நாளை இக்கோவிலில் உள்ள பூலாநந்தீஸ்வரரை வணங்கினால் தொழிலில் தடை நீங்கி, லாபம் அடைவர் என்பது ஐதீகமாக உள்ளது. தடை நீங்க உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..
Similar News
News March 4, 2026
தேனி: வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருட்டு

பெரியகுளம், வடகரை அனுமாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலாவுதீன். குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 13.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
News March 4, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று(மார்ச்.3) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவில் காவல் உதவி தேவைப்படுவோர் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
News March 3, 2026
தேனி : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

தேனி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


