News February 25, 2025

லாலு பிரசாத், மகன், மகளுக்கு கோர்ட் சம்மன்

image

முறைகேடு வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், மகன் தேஜ் பிரதாப் யாதவ், மகள் ஹேமா யாதவுக்கு டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அமைச்சராக 2004-2009 வரை லாலு பிரசாத் பதவி வகித்தபோது, ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்காக வரும் மார்ச் 11ஆம் தேதி லாலு பிரசாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டது.

Similar News

News February 25, 2025

இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு 133 ரன்கள் இலக்கு

image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், இந்திய அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற INDM அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ENGM அணி, 20 ஓவர்களில் 132/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அம்ப்ரோஸ் 23, டேரன் மேடி 25 ரன்கள் எடுத்தனர். INDM அணி தரப்பில் குல்கர்னி 3, மிதுன், நெகி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

News February 25, 2025

காலில் குத்தும் முள்ளைத்தான் பிடுங்குவோம்: சு.வெங்கடேசன்

image

₹500 நோட்டில் உள்ள இந்தியை முடிந்தால் அழியுங்கள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சவால் விடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் எம்.பி, ரூபாய் நோட்டில் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சமத்துவம் இருக்கும் இடத்தைக் குலைப்பது தங்கள் வேலையல்ல என்று கூறிய அவர், காலில் குத்தும் முள்ளைத்தான் பிடுங்குவோம், அதுவே அறிவுடைமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News February 25, 2025

விஜய் கட்சியில் இணையும் நடிகை மற்றும் பிரபலங்கள்

image

மாமல்லபுரத்தில் நாளை தவெக 2ஆம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் மூன்று முக்கிய பிரபலங்கள் இணையவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. நாதகவில் இருந்து நேற்று விலகிய காளியம்மாள், பாஜகவில் இருந்து இன்று விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த மருது அழகுராஜ் ஆகியோர் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!