News March 30, 2024
கருகல் நோய் தாக்குதலால் மல்லிகை பூ விவசாயிகள் வேதனை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான கண்ணியப்பிள்ளைபட்டி, பிச்சம்பட்டி,கதிர் நரசிங்கபுரம் போன்ற பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மல்லிகைப் பூக்களில் கருகல் நோய் ஏற்பட்டு பூக்கள் பாதிக்கப்படுவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்து வருவதால் பூ விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 20, 2024
தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்
தேனி மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 19, 2024
மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இணையதள முகப்பில் இந்தி மொழி உள்ளதால் அதனை உடனடியாக ஆங்கில மொழிக்கு மாற்றவும், தமிழ் இணையதளத்தை உருவாக்கவும் மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான O.பன்னீர் செல்வம் இன்று (நவ.19) கோரிக்கை விடுத்துள்ளார்.
News November 19, 2024
தேனியில் வாக்காளர் சிறப்பு முகாம் – ஆட்சியர்
தேனி மாவட்டத்தில் நவ.23 (சனி), நவ.24 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்திலுள்ள 563 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெற உள்ள இரண்டாவது சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்று படிவங்களை பூர்த்தி செய்து, மைய அலுவலர் (DLO) / வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.