News February 25, 2025
கணவன் வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த மனைவி பலி

கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரம் காந்திநகரை சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவர் அவரது மனைவி தவமணி(38) மற்றும் மூன்று குழந்தைகளை கடந்த 19-ல் அரிவாளால் வெட்டினார். இதில் இரு குழந்தைகள் உயிர் இழந்தனர். மனைவி தவமணி மற்றும் மற்றொரு குழந்தை ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தவமணி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 26, 2025
சேலத்தில் சீமான் பேட்டி

சேலத்தில் பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மாநில உரிமைகளை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
News February 26, 2025
சேலத்தில் விஜய் சேதுபதியுடன் ரசிகர்கள் செல்ஃபி

பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.25) சேலத்திற்கு வருகை தந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன், ரசிகர்களுக்கு செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
News February 26, 2025
சேலம் வருகை தந்த ராமதாஸுக்கு உற்சாக வரவேற்பு

சேலத்தில் உள்ள ஸ்ரீ வரலட்சுமி மஹாலில் நடைபெற்ற பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.