News February 25, 2025

தமிழக அரசில் 425 இடங்கள்.. ₹1,30,400 வரை சம்பளம்!

image

தமிழக அரசின் ஹாஸ்பிடல்களில் Pharmacist பணிக்கு 425 காலிப்பணியிடங்கள் உள்ளன. பார்மசி படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு, கணினி வழித் தேர்வு ஆகியவை நடைபெறும். சம்பளம் தகுதிக்கேற்ப ₹35,400 – ₹1,30,400 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் மார்ச் 10க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News February 25, 2025

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற பெண்

image

தெலங்கானாவில் கஜ்வெல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். நரசிம்முலு, நாகரத்னா தம்பதியினருக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

News February 25, 2025

பிரதமரின் ₹2,000 இன்னும் வரவில்லையா?

image

PM கிசான் திட்டத்தின் 19ஆவது தவணையான ₹2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது. இந்த தொகை இன்னும் கிடைக்கப்பெறாத விவசாயிகள், PM கிசான் இணையதளத்தில் Beneficiary List பக்கம் சென்று, உங்கள் விவரங்களைக் குறிப்பிட்டு GET Report என்பதை க்ளிக் செய்யவும். அதில் உங்கள் பெயர் இருந்தும், பணம் வரவில்லை என்றால், 1800-11-5526, 155261, 011-23381092, 23382401 எண்களில் புகார் அளிக்கலாம்.

News February 25, 2025

பணிக்கு வராத 63 ஆயிரம் ஆசிரியர்கள்?

image

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் காரணமாக 48,000 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 15,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஐகோர்ட் தடை விதித்த நிலையிலும், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!