News February 25, 2025
ரூ.100க்காக நண்பனை கொன்ற இளைஞர்.. மடக்கியது போலீஸ்

டெல்லியில் 100 ரூபாய்க்காக நண்பனை கொன்ற இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது. நரேலா பகுதியைச் சேர்ந்த அமன் (22), நண்பன் பண்டிக்கு ரூ.100 கடன் கொடுத்ததாகவும், அதை அவர் திரும்பி கேட்டபோது, பண்டி திரும்பி தராமல் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமன், பண்டி தலையில் செங்கல்லால் அடித்து கொலை செய்தான். சடலத்தை ரைஸ்மில் அருகே வீசிவிட்டு சென்றநிலையில், பாேலீஸ் மடக்கிப் பிடித்துள்ளது.
Similar News
News February 25, 2025
வெளியானது திடீர் வழுக்கை ரகசியம்

மஹாராஷ்டிராவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 300க்கும் மேற்பட்டோருக்கு, திடீரென அதீத முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணத்தை பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஹிம்மத்ராவ் கண்டறிந்துள்ளார். பொது விநியோக திட்டத்தில் வழங்கப்பட்ட கோதுமையில், 600 மடங்கு அதிகளவிலான செலினியம் இருந்ததே 4 நாள்களுக்குள் வழுக்கை ஏற்பட காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
News February 25, 2025
சிவராத்திரியில் 50 ஆண்டுகள் கழித்து.. 3 ராசிக்கு ஜாக்பாட்!

மகாசிவராத்திரி அன்று, 50 ஆண்டுகளுக்கு பிறகு சதுர்கிரக யோகம் (சூரியன், புதன், சந்திரன், சனி சேர்க்கை) நிகழ்கிறது *மிதுன ராசிக்கு வெளிநாட்டு யோகம் வரும். பணியில் மரியாதை கிடைக்கும். சுப காரியம் நிகழும் *துலாம் ராசிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆபீஸில் ஊதிய உயர்வு கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும் *மகர ராசிக்கு துக்கம் விலகும். பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
News February 25, 2025
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற பெண்

தெலங்கானாவில் கஜ்வெல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். நரசிம்முலு, நாகரத்னா தம்பதியினருக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.