News February 25, 2025
கிராமி விருது பாடகி காலமானார்

கிராமி விருது பெற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி ராபர்டா பிளாக் (88) காலமானார். Killing Me Softly, The First Time I Ever Saw Your Face உள்ளிட்ட பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ராபர்டா பிளாக். அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நேற்று காலமானார். அவர் உயிர் அமைதியாக பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 25, 2025
சிவராத்திரியில் 50 ஆண்டுகள் கழித்து.. 3 ராசிக்கு ஜாக்பாட்!

மகாசிவராத்திரி அன்று, 50 ஆண்டுகளுக்கு பிறகு சதுர்கிரக யோகம் (சூரியன், புதன், சந்திரன், சனி சேர்க்கை) நிகழ்கிறது *மிதுன ராசிக்கு வெளிநாட்டு யோகம் வரும். பணியில் மரியாதை கிடைக்கும். சுப காரியம் நிகழும் *துலாம் ராசிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆபீஸில் ஊதிய உயர்வு கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும் *மகர ராசிக்கு துக்கம் விலகும். பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
News February 25, 2025
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற பெண்

தெலங்கானாவில் கஜ்வெல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். நரசிம்முலு, நாகரத்னா தம்பதியினருக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
News February 25, 2025
பிரதமரின் ₹2,000 இன்னும் வரவில்லையா?

PM கிசான் திட்டத்தின் 19ஆவது தவணையான ₹2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது. இந்த தொகை இன்னும் கிடைக்கப்பெறாத விவசாயிகள், PM கிசான் இணையதளத்தில் Beneficiary List பக்கம் சென்று, உங்கள் விவரங்களைக் குறிப்பிட்டு GET Report என்பதை க்ளிக் செய்யவும். அதில் உங்கள் பெயர் இருந்தும், பணம் வரவில்லை என்றால், 1800-11-5526, 155261, 011-23381092, 23382401 எண்களில் புகார் அளிக்கலாம்.