News February 25, 2025
புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். இங்கு <
Similar News
News March 8, 2026
புதுகையில் நாளை தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

புதுகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நாளை நடைபெறவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதால் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
புதுக்கோட்டை: மதுபோதையில் ரகளை – ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அடுத்த செட்டியாபட்டி கிளை சாலையில் நேற்று கணேஷ்குமார் (35) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நமண சமுத்திரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.
News March 8, 2026
புதுக்கோட்டை: கண்மாயில் விழுந்த வாகனம் – ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கரூர் – ஆவுடையார் கோவில் சாலை வரிக்குடி எல்லை கிராமம் அருகில் சென்ற இருசக்கர வாகனம், நிலை தடுமாறி சாலையோரம் இருந்த இளம்பாவயல் கண்மாயில் விழுந்து. இந்த விபத்தில், வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த கோனரிஏந்தல் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி நா.ரெத்தினம் (52) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். SHARE பண்ணுங்க!


