News February 25, 2025
புதுச்சேரி முன்னாள் முதல்வர் டெபாசிட் இழப்பார் – சபாநாயகர்

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் இன்று செய்தியாளர் சந்திப்பில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகி12 ஆம் முதல்வர் ரங்கசாமி 2025 -2026 ஆம் நிதிநிலை ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சபாநாயகர் டெபாசிட் இழப்பார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவரது சொந்த ஊரான மனவெளி தொகுதியில் போட்டியிட தயாரா என சவால் விடுத்துள்ளார்.
Similar News
News August 31, 2025
புதுவையில் பள்ளி மாணவர்கள் சைக்கிள் ஊர்வலம்

புதுச்சேரி அரசு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய விளையாட்டு தினம் இன்று (ஆகஸ்ட் 31) கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய விளையாட்டு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர்களின் சைக்கிள் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
News August 31, 2025
புதுச்சேரியில் இன்று மதுபான கடைகள் மூடல்

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் இன்று மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் உத்தரவிட்டுள்ளார். ஊா்வலத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நலன்கருதி இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊா்வலம் காமராஜா் சாலை, நேரு வீதி, மகாத்மா காந்தி எஸ்.வி.பட்டேல் சாலை,வழியாக கடற்கரை சாலைக்குச் செல்கிறது.
News August 31, 2025
புதுவை மக்களுக்கு சீனியர் எஸ்.பி எச்சரிக்கை

புதுச்சேரி மக்களுக்கு சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுதுள்ளார். அதில், ஆன்லைனில் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி, வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால், அதனை நம்பி தர வேண்டாம் எனவும், அதனை மீறி அவர்களிடம் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளை கொடுத்து அதன் மூலம் சைபர் மோசடி நடந்ததால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.