News February 25, 2025

₹500 நோட்டில் ஹிந்தியை அழிக்க முடியுமா? H.ராஜா

image

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என CM ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி புகைந்து வருகிறது. இந்த சூழலில், ஹிந்தியை எதிர்ப்பதென்றால் ₹500 நோட்டில் இருக்கும் ஹிந்தியை அழித்து பாருங்கள் என H.ராஜா சவால் விடுத்திருக்கிறார். உங்கள் கருத்து என்ன?

Similar News

News April 9, 2026

தவெக தொண்டர்கள் பயந்துட்டாங்க: SP வேலுமணி

image

கரூர் சம்பவத்தால் பயந்து போனதால்தான் தவெக தொண்டர்களே EPS கூட்டத்துக்கு வந்து கொடி காட்டினார்கள் என SP வேலுமணி கூறியுள்ளார். அக்டோபரில் நடந்த EPS கூட்டத்தில் தவெக கொடி காட்டப்பட்டது கூட்டணிக்காக அதிமுக போட்ட ஸ்கெட்ச் என பேசப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடக்கவில்லை; அவர்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

News April 9, 2026

உதயநிதிக்கு உடல்நலம் பாதிப்பு

image

கடந்த சில நாள்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாதவரம் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனத்தை ஆதரித்து உதயநிதி பரப்புரை செய்தார். அப்போது தொண்டை கரகரப்புடன் சிரமப்பட்டு பேசிய அவர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் உங்களிடம் நிறைய நேரம் பேசமுடியவில்லை எனப் பிரசாரத்தை பாதியில் முடித்துக் கொண்டார்.

News April 9, 2026

இது தென்மாநில குரல்களை நெரிக்கும் செயல்: ஸ்டாலின்

image

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் முடிவால் மக்களின் வரிப்பணம் வீணாகும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பாஜக ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும் என்றும் அவர் X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற முக்கிய நடவடிக்கையை தேர்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!