News February 25, 2025
‘ஆள வுட்றா சாமி..’ இந்தியன் 3ல் இருந்து வெளியேறிய லைகா

விக்ரம் படத்தை பார்த்து ‘தலைக்கீழாக தான் குதிப்பேன்’ என 2019ல் நின்றுபோன இந்தியன் 2 படத்தை கடந்த ஆண்டு லைகா ரிலிஸ் செய்தது. இறுதியில் ₹83 கோடி நஷ்டம்தான் மிச்சம். இந்தியன் 3க்கும் சேர்த்து துண்டு போட்ட பிரமாண்ட இயக்குநர், ஒரு பாட்டுக்கு ₹20 கோடி வேணும் என கண்டிஷனும் போட்டாராம். ‘போதும் டா சாமி’ என லைகா படத்தில் இருந்து விலக, ரெட் ஜெயண்ட் தற்போது படத்தை கையில் எடுத்து இருக்கிறதாம்.
Similar News
News February 25, 2025
சீமானுக்கு ஆண்மை பரிசோதனை?

விஜயலட்சுமி தொடுத்த பாலியல் வழக்கில், சீமானிடம் ஆண்மை மற்றும் குரல் பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிசோதனைகளைத் தொடர்ந்து அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும், சீமான் கைது செய்யப்படவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 27ஆம் தேதி ஆஜராக சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
News February 25, 2025
டீ பார்ட்டிகளுக்கு ரூ.1 கோடி செலவிட்ட அமைச்சர்கள்

புதுச்சேரி மாநில அமைச்சர்கள், அரசுப் பணத்தில் செலவிட்டது குறித்து தகவல் அறியும் சமூக செயல்பாட்டாளர் அசோக் ராஜா என்பவர் RTI மூலம் தகவல் பெற்றுள்ளார். அதில் 4 ஆண்டுகளில் டீ பார்ட்டிகளுக்காக ரூ.1 கோடிக்கு மேல் அமைச்சர்கள் செலவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, அமைச்சர்கள் ரூ.41 லட்சத்துக்கு டீ, காபி குடித்து இருப்பதாகவும், ரூ.61 லட்சத்துக்கு பூங்கொத்து வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
News February 25, 2025
வெறும் 3 ஓவரில் சதம்.. உங்களுக்கு தெரியுமா?

கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத சாதனையை ஆஸி., ஜாம்பவான் டான் பிராட்மேன் படைத்துள்ளார் என்பது தெரியுமா? 1931ல் நடந்த உள்நாட்டு போட்டியில் 3 ஓவரில் சதம் அடித்தார். அப்போது ஓவருக்கு 8 பந்துகள். 1st ஓவரில் 33, 2வது ஓவரில் 40, 3வது ஓவரில் 27 ரன்களும் எடுத்து சதத்தை எட்டினார். தற்போது ஓவருக்கு 6 பந்துகள் என்பதால் 3 ஓவரில் சதம் அடிக்க முடியாத நிலை உள்ளது. *இன்று பிராட்மேனின் நினைவுநாள்.