News February 25, 2025
விவேக் ராமசாமியின் அடுத்த டார்கெட்

ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். டிரம்ப் அரசில் அரசாங்க திறன் துறை (DOGE) பொறுப்பில் இருந்து விலகிய சில நாள்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், இதற்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். தொழில் தொடங்குவது, தொழில் வளர்ச்சிக்கும் நாட்டிலேயே சிறந்த மாகாணமாக ஓஹியோவை மாற்றுவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.
Similar News
News February 25, 2025
AUS-SA போட்டி 20 ஓவர்களாக குறைப்பு?

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறவுள்ள ராவல்பிண்டி மைதானம் அமைந்திருக்கும் பகுதியில், தொடர்ச்சியாக மழை பெய்வதால் இதுவரை டாஸ் போடப்படவில்லை. இரவு 7.20க்குள் மழை நிற்கும் பட்சத்தில், ஆட்டத்தை 20 ஓவர்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.
News February 25, 2025
மேலே பாருங்க. எல்லாமே தெரியும்

வரும் 28ஆம் தேதி நைட் வானத்தை நோக்கி பார்த்தீங்கன்னா, 7 கோள்களையும் (பூமி தவிர) ஒரே நேரத்துல பார்க்கலாம். எப்பவோ ஒருமுறை நடக்குற இந்த அதிசயத்தை மிஸ் பண்ணிடாதீங்க. சூரியன் அஸ்தமிச்ச உடனே மேற்கு வானத்துல சனி, புதன், வெள்ளி கிரகங்களை வெறும் கண்கள்லயே பார்க்கலாம். அதுக்கு மேல நடு வானத்துல செவ்வாயையும், கிழக்குல செவ்வாயையும் பார்க்கலாம். யுரேனஸ் & நெப்டியூன் கிரகங்களைப் பார்க்க டெலெஸ்கோப் வேணும்.
News February 25, 2025
₹500 கோடி வசூலித்த ‘சாவா’

‘சாவா’ திரைப்படம் உலகளவில் ₹500 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில், விக்கி கெளஷல்-ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸான இந்தப் படம், இந்தியாவில் மட்டும் ₹420 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.