News February 25, 2025
குட்டிகளை பெற்றெடுக்கும் ஒரே ஆண் உயிரினம்

Syngnathidae குடும்பத்தைச் சேர்ந்த மீன் வகைகளில், ஆண் இனங்கள் குட்டிகளை பெற்றெடுக்கின்றன. இவை கடல் குதிரைகள், குழாய் மீன் அல்லது கடல் டிராகன்கள் என அழைக்கப்படுகின்றன. முதலில் பெண் மீன்கள் ஆணின் வயிற்றுக்குள் உள்ள சிறப்பு பைகளில் முட்டைகளை மாற்றுகின்றன. முட்டைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, 2-4 வாரங்களுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் அவை 50 – 1000 குஞ்சுகளை பெற்றெடுக்கின்றன.
Similar News
News February 25, 2025
சேலம் வருகை தந்த முதல்வருக்கு அமைச்சர் வரவேற்பு

சேலம் மாவட்டத்திற்கு இன்று (பிப்.25) வருகை புரிந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் புத்தகங்களை வழங்கி வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.
News February 25, 2025
தோனியே கேப்டனாக இருந்தாலும்.. சானா சாடல்

INDக்கு எதிரான போட்டிக்கான PAK அணியை அறிவித்த போதே, அந்த அணி தோல்வி அடைந்துவிட்டதாக PAK மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சானா மிர் விமர்சித்துள்ளார். தோனி போன்ற தலைசிறந்த கேப்டனால் கூட இப்படி ஒரு அணியை வைத்து வெல்ல முடியாது எனவும், 2 பார்ட் டைம் பவுலர்களை வைத்து போட்டியை எதிர்கொண்டதே தவறு எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், PCB நிர்வாகத்தில் முழுமையான மாற்றம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 25, 2025
Delimitation: திமுக எதிர்ப்பு ஏன்?

மத்திய அரசு திட்டமிடும் தொகுதி மறுவரையறைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால், மறுவரையறைக்குப் பின் தமிழகத்தின் லோக் சபா தொகுதிகள் 39இல் இருந்து 31ஆக குறையும். அதேநேரம், உத்தர பிரதேசத்தின் தொகுதிகள் 80இல் இருந்து 143ஆக உயரும். இது தென் மாநிலங்களின் அதிகாரத்தை குறைப்பதாக திமுக குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்த உங்களது கருத்து என்ன?