News February 25, 2025
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..

*படிக்கும் போது, முக்கியமான பாயிண்ட்ஸை அடிக்கோடிட்டு, வையுங்கள். இல்லை, வேறோரு கலர் கொடுத்து முக்கியமான பாயிண்ட்ஸை மார்க் செய்யவும் *முதல் முறை படிக்கும் போதே, பதிலுக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு படித்து விடுங்கள் * அனைத்து பாடங்களையும் தொடர்ச்சியாக படித்து கொண்டே இருக்க வேண்டாம். அது மூளையை டயர்ட் ஆக்கும் *தயவு செய்து மனப்பாடம் செய்யாதீர்கள். தைரியமாக எழுதுங்கள். வெற்றி நிச்சயம்!
Similar News
News February 25, 2025
SPAM கால் என நினைத்து வேலையை இழந்த இளைஞர்

Reddit யூசரோட மொபைலுக்கு வெளிநாட்டு கால் ஒன்னு வந்திருக்கு. மோசடி, spam அழைப்பா இருக்கலாம்னு நினைச்சு அத எடுக்காம விட்டுட்டாரு. வேறொரு நாள் ட்ரூ காலர்ல அந்த நம்பர போட்டு பார்த்தப்ப தான் பதறிப் போனாரு. காரணம் அது அமெரிக்காவுல இருக்குற அமேசான் நிறுவனத்துல இருந்து ஜாப் ஆஃபரா வந்த கால். திரும்ப அந்த நம்பர கான்டாக்ட் பண்ணப்ப நோ யூஸ். வட போச்சேன்னு அப்செட்ல இருக்காரு.
News February 25, 2025
₹3,252 கோடி நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: அமைச்சர்

100 நாள் வேலைத்திட்டத்திற்கான ₹3,252 கோடி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என அமைச்சர் பெரியசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நிதி விடுவிப்பதைத் தாமதித்தால், திட்ட பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்க முடியாமல் போவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊதிய நிலுவை ₹2,400 கோடியாகவும், உட்கட்டமைப்பு நிலுவை ₹852 கோடியாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
News February 25, 2025
BREAKING: காங்கிரஸ் EX எம்.பி.க்கு ஆயுள் தண்டனை

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் EX எம்.பி. சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு டெல்லியில் 1984இல் கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சஜ்ஜன்குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.