News February 25, 2025
தென்காயில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் (ம) மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தவுள்ளது. மார்ச் 8 காலை 9 மணி to மாலை 3 மணி வரை ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை இதில் கலந்து கொண்டு பயனடையலாம். SHARE IT.
Similar News
News March 12, 2026
தென்காசி: OPS அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் மதுரையில் திமுகவில் இணைந்து கொண்ட, தென்காசி மாவட்ட ஒபிஎஸ் அணி நிர்வாகிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து வரவேற்று பேசினார். இதில் மாவட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
தென்காசியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.!

தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 11 கிலோ கஞ்சா கடத்தியதாக, விக்னேஷ் (32), இசக்கிக்குமார் (31), பேச்சிமுத்து (30) ஆகியோர் கடந்த பிப்., மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S மாதவன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவின்படி 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
News March 11, 2026
தென்காசி: Spam Calls தொல்லையா? இனி END CARD!

தென்காசி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க


