News March 30, 2024

வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்

image

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த 20ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27ம் தேதியுடன் முடிந்தது. 28ம் தேதி முதல் வேட்புமனு பரிசீலனை நடந்து, 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும். அத்துடன், சின்னம் ஒதுக்கப்படாத கட்சிகள், சுயேச்சைகளுக்கு சின்னமும் ஒதுக்கப்படும்.

Similar News

News February 7, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,360 உயர்ந்தது

image

தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ₹1,600 குறைந்த நிலையில், மாலையில் ₹1,040 அதிகரித்தது. இந்நிலையில், இன்று (பிப்.7) மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,360 உயர்ந்துள்ளது. 1 கிராம் தங்கம் ₹170 அதிகரித்து ₹14,420-க்கும், சவரன் ₹1,360 உயர்ந்து ₹1,15,360-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்வதால் வரும் நாள்களிலும் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 7, 2026

முஸ்லிம் கட்சிகளுக்கு பாராபட்சம் காட்டும் திமுக?

image

கூட்டணி கட்சிகளுக்கு எப்படியெல்லாம் தொகுதிகளை குறைத்து கொடுக்கலாம் என திமுக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 2 முஸ்லிம் கட்சிகளுக்கு (IUML, மமக) 5 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது திமுக. ஆனால் தற்போது 4 முஸ்லிம் கட்சிகளுக்கும் சேர்த்தே 5 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்திருக்கிறதாம். இதனால் அதிருப்தியில் உள்ள முஸ்லிம் கட்சிகள், திமுக கூட்டணியை விட்டு விலகுமா என கேள்வியும் எழுந்துள்ளது.

News February 7, 2026

கூட்டணி விவகாரத்தில் CM ஸ்டாலின் முன் உள்ள சவால்கள்

image

பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள போதிலும் கூட்டணி விவகாரம் இன்னும் முடியாமல் உள்ளது. தங்கள் கூட்டணி வலுவாக உள்ளதாக திமுகவினர் கூறி வரும் போதிலும், காங்., விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, மநீம என அனைவருமே கூடுதல் சீட்டுகள் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். அதற்கு புதிய கட்சியின் வருகையே காரணம் எனக் கூறப்படுகிறது. இதனை சமாளிக்க ஸ்டாலின் திமுகவில் விரைவில் குழு ஒன்றை அமைக்க உள்ளாராம்.

error: Content is protected !!