News February 25, 2025
காவலர்களின் சம்பளம் உயருகிறது?

தமிழகத்தில் கான்ஸ்டபிள்கள் மாதம் ₹18,200- ₹52,900 வரை சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில், 5ஆவது தமிழக காவல்துறை ஆணையம், மாத ஊதியத்தை ₹21,700 முதல் ₹69,100 வரை அதிகரிக்க CM ஸ்டாலினிடம் அளித்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. பிற மாநில காவல்துறையிலும், மத்திய அரசாலும் அளிக்கப்படும் ஊதியத்தை சுட்டிக்காட்டி இதைப் பரிந்துரைத்துள்ளது. பரிந்துரை அமலானால், ஆயிரக்கணக்கானோர் ஊதிய உயர்வு பெறுவர்.
Similar News
News February 25, 2025
₹18 கோடி கடன் தள்ளுபடி? ப்ரீத்தி ஆவேசம்

பாஜக ஆதரவாளராக மாறியதால், ப்ரீத்தி ஜிந்தாவின் ₹18 கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக, கேரள காங். கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே கடனை அடைத்து கணக்கை மூடிவிட்டதாகவும், ஒரு அரசியல் கட்சி பொய் செய்திகளை பரப்புவது வெட்கக்கேடானது எனவும் அவர் தனது X பக்கத்தில் சாடியுள்ளார். மேலும், தனக்காக யாரும் கடனை தள்ளுபடி செய்யவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.
News February 25, 2025
அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக? டி.ஜெ. பதில்

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சி பாெதுச் செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இருமொழி கொள்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், அச்சம் காரணமாகவே அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக அரசு கூட்டியுள்ளது எனவும் அவர் சாடியுள்ளார். திமுகவுக்கும், பாஜகவுக்கும் ரகசிய புரிதல் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News February 25, 2025
‘விடாமுயற்சி’ வசூலை முந்தும் ‘டிராகன்’?

அமெரிக்காவில் ‘விடாமுயற்சி’ படத்தின் வசூலை ‘டிராகன்’ முந்த வாய்ப்புள்ளது. ‘விடாமுயற்சி’ படம் முதல் வார இறுதியில் $8 லட்சம் (₹6.95 கோடி) வசூலித்தது. ஆனால், ‘டிராகன்’ படம் வெளியான 3 நாள்களில் $6.50 லட்சம் (₹5.64 கோடி) வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருப்பதால், 1 மில்லியன் டாலர் வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.