News February 25, 2025
விருதுநகரை பாராட்டிய நிதி ஆயோக்: ₹3 கோடி பரிசு

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை பாராட்டி ₹3 கோடி பரிசுத் தொகையை நிதி ஆயோக் அறிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் முன்னோடியாக திகழ்வதாகவும் புகழ்ந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதாரத்தை பேணி காப்பதிலும், ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்விலும் விருதுநகர் மாவட்டம் கூட்டு முயற்சியுடன் திறம்பட செயல்பட்டதாக நிதி ஆயோக் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
குழந்தை பிறந்த பின் வயிற்றை பழைய நிலைக்கு மாற்றணுமா?

பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் பலவிதமான உடல் மாற்றங்களை எதிர்கொள்வர். அதில் பொதுவான பிரச்னை தொப்பை தான். உங்கள் வயிற்றை பழைய நிலைக்கு மாற்ற சில வழிகள் இருக்கிறது. ➤பழங்கள், காய்கறிகள், புரதம் மற்றும் கொழுப்புகள் என சமநிலையான உணவை உட்கொள்வது அவசியம் ➤வயிற்று தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யலாம் ➤Stress ஆகாமல் பார்த்துக்கொள்வது அவசியம் ➤போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். SHARE.
News March 9, 2026
ஈரான் போரை விவாதிக்க மறுப்பது ஏன்? ராகுல் காந்தி

மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் இந்தியா பெரிய பின்னடைவை சந்திக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பங்குச்சந்தையின் வீழ்ச்சியே அதற்கு உதாரணம் என்றும், அதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதில் பாஜகவுக்கு என்ன பிரச்னை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். விவாதித்தால் PM மோடி எப்படி அமெரிக்காவால் பிளாக்மெயில் செய்யப்படுகிறார் என்பது வெளியே வந்துவிடும் என்பதால் பாஜக மறுப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
News March 9, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசின் HAPPY NEWS

தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் சிறு வணிகர்களுக்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதில், முக்கியமாக சிறுகடை அமைப்பதற்காக வணிகர்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டு வருகிறது. வணிகர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. வணிகர் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (அ) அருகிலுள்ள வணிகர் நல வாரிய அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT


