News February 25, 2025
CM தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

CM ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிலையில், கூடுதல் அம்சங்கள் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாதவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 11, 2026
வங்கியில் 1,300 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

IDBI வங்கியில் காலியாக உள்ள 1,300 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர், அசிஸ்டண்ட் மேனேஜர் பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி, 2 ஆண்டு பணி அனுபவம் தேவை. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். ஆண்டுக்கு சம்பளமாக ₹6.14 லட்சம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் இந்த <
News March 11, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 11, மாசி 27 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News March 11, 2026
ஈரானின் கண்ணிவெடியால் டிரம்ப் ஆவேசம்!

<<19350594>>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் <<>>வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையெனில், இதற்கு முன் கண்டிராத அளவில் இராணுவ நடவடிக்கை இருக்கும் என்று கூறியுள்ளார். அந்த கண்ணிவெடிகளை அகற்றினால், ஈரான் சரியான திசையில் நகரும் எனவும் தெரிவித்துள்ளார்.


