News February 25, 2025
பாத்திரத்தில் இருந்த நீரில் மூழ்கி பெண் குழந்தை பலி

கண்டமங்கலம் பள்ளிப்புதுப்பட்டு, சேர்ந்தவர் பெ.அல்லிமுத்து ஜீவிதா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்த கடந்த பிப்.21-ஆம் தேதி ஜீவிதா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி மயக்கமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜீவிதா உயிரிழந்தாா். இது குறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
விழுப்புரம் : இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்

விழுப்புரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <
News March 6, 2026
விழுப்புரம் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நேற்று (05.03.2026) நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனீத் , மாவட்ட வருவாய் அலுவலர் .அரிதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
News March 6, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி ரா.மணிகண்டன்(38) புதுச்சேரி- மங்களூா் வாராந்திர விரைவு ரயிலை தண்ணீரால் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா் . அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். அவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


